நாப்கினில் மறைத்து ரூ.5½ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது
|மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 68 லட்சம் போதைப்பொருட்களை நாப்கினில் மறைத்து கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 68 லட்சம் போதைப்பொருட்களை நாப்கினில் மறைத்து கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நாப்கினில் மறைத்து கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மும்பை விமான நிலைய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாப்கினில் கொகைன் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டை சோ்ந்த 2 பெண்கள் மற்றும் கேப்சூல் மூலம் வயிற்றுக்குள் விழுங்கி கொகைன் கடத்தி வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.5.68 கோடி போதைப்பொருள்
அவர்களிடம் இருந்து ரூ.5 கோடியே 68 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.