< Back
மும்பை
மும்பை
லோயர் பரேலில் தொழிற்பேட்டையில் பயங்கர தீ
|11 Aug 2023 2:30 AM IST
மும்பை லோயர் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் தீடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது
மும்பை,
மும்பை லோயர் பரேல் சீத்தாராம் ஜாதவ் ரோட்டில் சாகா, நாகர் தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 3 வாகனங்கள், 2 தண்ணீர் டேங்கர், 3 தண்ணீர் ஜெட்டிகளுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தொழிற்பேட்டையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பொது மக்கள் காயமின்றி உயிர் தப்பியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக நேற்று லோயர் பரேல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.