< Back
மும்பை
கடன் தொல்லையால் மனைவியுடன் விவசாயி தற்கொலை
மும்பை

கடன் தொல்லையால் மனைவியுடன் விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
27 Aug 2022 10:43 PM IST

ஜல்னா மாவட்டம் வாடிகல்யாவை சேர்ந்த விவசாயி கடன் தொல்லையால் மனைவியுடன் தற்கொலை

மும்பை,

ஜல்னா மாவட்டம் அம்பத் தாலுகா வாடிகல்யாவை சேர்ந்தவர் சஞ்சய் தெபே (வயது 45). விவசாயி. இவரது மனைவி சங்கீதா (42). சஞ்சய் தெபே டிராக்டர் வாங்குவதற்காக தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த கணவன், மனைவி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி கோண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்