< Back
மும்பை
மும்பை
நாக்பூரில் மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
|14 Sept 2022 6:50 PM IST
நாக்பூரில் மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
நாக்பூர்.
நாக்பூர் மாவட்டம் நார்கெட் தாலுகா பிம்பல்தாரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ் ஜூட்பே (வயது60). இவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட வங்கியில் கடன் பெற்று இருந்தார். அண்மையில் பெய்த மழை காரணமாக பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி நாசமானது. இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் விளைநிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஜலால்கேடா போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக்பூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ராஜீவ் ஜூட்பேவுடன் சேர்ந்து 5 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.