< Back
மும்பை
ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
மும்பை

ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
2 Sep 2023 7:30 PM GMT

ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் வலியுறுத்தியுள்ளார்

நாக்பூர்,

ஜல்னா மாவட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்த்தில் வன்முறை வெடித்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து தீர்ப்பு அளித்தப்பிறகு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அமைதியாக போராடிய மராத்தா சமூகத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி இருப்பது துரதிருஷ்டவசமானது. மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் அரசு அக்கறை காட்டவில்லை என்பதை இந்த சம்பவம் காட்டி உள்ளது. இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தினால் மட்டும் மராத்தா ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. அதற்கான சட்ட திருத்தங்கள் தேவை. இருப்பினும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களும், இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் சுயநல நோக்கத்திற்காக தவறான முடிவுகளை எடுத்து மராத்தா சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதற்காக மராத்தா சமூதாயத்திடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கும் ஜல்னா சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்