< Back
மும்பை
பரீட்சையில் தோல்வி: என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மும்பை

பரீட்சையில் தோல்வி: என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

பரீட்சையில் தோல்வி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாக்பூர்,

நாக்பூர், பஞ்ச்போலி பகுதியில் உள்ள வைசாலி நகர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று சோகமாக இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அன்று இரவு உணவை பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட அவர் பின்னர் தனது அறைக்கு தூங்க சென்றார். காலை 5 மணி அளவில் வாலிபரின் தந்தை அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.

இதற்கிடையே வாலிபர் தற்கொலை செய்துகொண்டது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவர் சில பாடங்களில் தோல்வி அடைந்தது தெரியவந்தது. இதனால் மனஉளைச்சல் அடைந்த வாலிபர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

போலீசார் இதுகுறிதது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்