மான்கூர்டில் லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
|மான்கூர்டில் லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
மும்பை,
மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் விபுல் போயர்(வயது24). என்ஜினீயரிங் மாணவர். இவர் சம்பவத்தன்று இரவு வாஷியில் இருந்து செம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவருடன் வந்தார். சயான்-பன்வெல் நெடுஞ்சாலையில் மான்கூர்டு டி-ஐங்ஷன் பகுதியில் வந்த போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இளம்பெண் தூக்கி வீசப்பட்டார். என்ஜினீயரிங் மாணவர் விபுல் போயர் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து செல்லப்பட்டு சாலை தடுப்பு சுவரில் மோதினார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. மாணவிக்கு கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் விபுல் போய் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மான்கூர்டு போலீசார் லாரி டிரைவர் தர்மேந்திர சிங்கை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.