< Back
மும்பை
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
மும்பை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

தினத்தந்தி
|
4 Oct 2023 2:30 AM IST

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மும்பை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு

பன்வெல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 5.35 மணி முதல் 7.25 மணி வரை தண்டவாள மாற்றம் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பன்வெலில் இருந்து புறப்பட்ட மற்றும் வந்த ரெயில்கள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பன்வெல் - தானே, பன்வெல் - சி.எஸ்.எம்.டி. இடையே 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில் சேவை பாதிப்பு குறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி மனஸ்புரே கூறுகையில், "பன்வெல் நோக்கி சென்ற துறைமுக, டிரான்ஸ் ஹார்பர் வழித்தட மின்சார ரெயில்கள் பேலாப்பூர்-பன்வெல் இடையே 30 நிமிடங்கள் தாமதமாக இயங்கியது" என்றார்.

பயணிகள் அவதி

காலை நேரத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல இருந்தவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். பன்வெல் - பேலாப்பூர் இடையே கடந்த சனிக்கிழமை இரவு முதல் திங்கள் மதியம் வரை 38 மணி நேரம் நடந்த தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மறுநாளே அங்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்