மின்சார ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி
|தானே - பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
தானே - பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ரெயில் சேவை பாதிப்பு
தானே - பன்வெல் இடையே டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் மதியம் 12.40 மணிக்கு கோபர்கிரைனே அருகில் உயரழுத்த மின் கம்பியில் (ஓவர் ஹெட் வயர்) கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தானே - பன்வெல் இடையே இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
மேலும் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி நடந்து அருகில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து பஸ், ஆட்டோ மூலம் செல்லவேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
பயணிகள் அவதி
இந்தநிலையில் தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணிகள் முடிந்து பிற்பகல் 3.10 மணிக்கு அந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த தகவலை மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் டுவிட்டரில் கூறியுள்ளார். தானே - பன்வெல் இடையே 2 மணி நேரத்திற்கு மேல் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் நேற்று பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.