< Back
மும்பை
பராமரிப்பு பணி காரணமாக தலோஜா, கார்கர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து
மும்பை

பராமரிப்பு பணி காரணமாக தலோஜா, கார்கர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து

தினத்தந்தி
|
14 Sept 2023 1:15 AM IST

பராமரிப்பு பணி காரணமாக தலோஜா, கார்கர் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நவிமும்பை,

பராமரிப்பு பணி காரணமாக தலோஜா, கார்கர் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

24 மணி நேரம் பணி

நவிமும்பையில் ஹெட்வானே நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் பைப்லைன் வழித்தடத்தில் பழுது பார்க்கும் பணியை சிட்கோ மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் தொடங்கி மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிட்கோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடிநீர் வினியோகம் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக ஹெட்வானே பைப்லைனில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் துரோணகிரி, ஜே.என்.பி.டி, உல்வே, கார்கர், தலோஜா ஆகிய இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் குறைந்த அழுத்தத்துடன் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். பாதிக்கப்படும் இடங்களில் குடிமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்