< Back
மும்பை
புனேயில் பெய்த கனமழையால் ரெயில், விமான நிலையங்களில் வெள்ளம்- பயணிகள் அவதி
மும்பை

புனேயில் பெய்த கனமழையால் ரெயில், விமான நிலையங்களில் வெள்ளம்- பயணிகள் அவதி

தினத்தந்தி
|
19 Oct 2022 12:15 AM IST

புனேயில் பெய்த கனமழையால் ரெயில் மற்றும் விமான நிலையத்தில் வெள்ளம் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

புனே,

புனேயில் பெய்த கனமழையால் ரெயில் மற்றும் விமான நிலையத்தில் வெள்ளம் தேங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கனமழை

புனேயில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. நேற்று முன்தினம் காலை 5.30 மணி வரையில் 10 செ.மீ மழை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழையின் காரணமாக புனே ரெயில் நிலையத்தின் உள்ளேயும், ரெயில்வே தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பயணிகள் தண்ணீரில் நடந்து சென்றனர்.

சாலைகளில் வெள்ளம்

ரெயில் நிலையம் வெளியே பஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மற்ற வாடகை டாக்சிகள், வாகன ஓட்டிகளிடம் பயணிகள் சாதாரண கட்டணத்தை விட ரூ.500-ஐ வாடகை செலுத்தி தங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

இதற்கிடையில் புனே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மழையினால் அவதி அடைந்தனர். விமானங்கள் தாமதமாக வந்ததால் வாடகை டாக்சிகளை பெற 40 நிமிடங்கள் காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.


மேலும் செய்திகள்