< Back
மும்பை
திருமணம் செய்வதாக கூறி கால்சென்டர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்த டாக்டர் கைது
மும்பை

திருமணம் செய்வதாக கூறி கால்சென்டர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்த டாக்டர் கைது

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

திருமணம் செய்வதாக கூறி கால்சென்டர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

திருமணம் செய்வதாக கூறி கால்சென்டர் பெண் ஊழியரை பலாத்காரம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

பலாத்காரம்

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பயிற்சி டாக்டராக இருந்து வரும் யோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. டாக்டர் அப்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தனிமையில் சந்தித்து பலாத்காரம் செய்தார். இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வலியுறுத்தி வந்தார். ஆனால் யோகேஷ் திருமணத்திற்கு மறுத்து மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

டாக்டர் கைது

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றியதும், அது தொடர்பாக கடந்த மாதம் 27-ந்தேதி வழக்கு ஒன்று பதிவாகி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்