< Back
மும்பை
சனாதன தர்மம் தொடர்பான பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - முதல்-மந்திரி ஷிண்டே வலியுறுத்தல்
மும்பை

சனாதன தர்மம் தொடர்பான பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - முதல்-மந்திரி ஷிண்டே வலியுறுத்தல்

தினத்தந்தி
|
5 Sept 2023 12:30 AM IST

சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.

ஷிண்டே கண்டனம்

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசினார். அவரின் பேச்சுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் சனாதன தர்மம் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சனாதன தர்மத்துக்கு எதிராக பேசும் இதுபோன்ற கட்சி தலைவர்களுக்கு தான் உத்தவ் தாக்கரே அறுசுவை விருந்து கொடுத்தார். இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். அல்லது சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்ததாக கருதப்படும். பால் தாக்கரே இருந்திருந்தால் கண்டிப்பாக தனது வேதனையை வெளிப்படுத்தி, இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய சிவசேனாவினருக்கு உத்தரவிட்டு இருப்பார். இந்து கட்சியாக உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அவர் தனது பேச்சுக்காக உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்