< Back
மும்பை
காதல் தோல்வியால் விரக்தி; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மும்பை

காதல் தோல்வியால் விரக்தி; வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2022 2:30 AM IST

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை,

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் காலை மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் பீட் மாவட்டம் அருகில் உள்ள ஜாம்கேட் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்தநிலையில் மீண்டும் போன் செய்த அந்த நபர் தென்மும்பை ஜாவேரி பஜார் பகுதியிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு கண்டறிதல், செயலிழப்பு பிரிவினருடன் ஜாவேரி பஜார் பகுதியில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு புரளியை கிளப்பிய நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை பிடித்தனர். விசாரணையில் அவர் ஜாவேரி பஜார் பகுதியை சேர்ந்த தினேஷ் சுதர் என்பது தெரியவந்தது. முதல் கட்டவிசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக விரக்தியில் இருந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்