< Back
மும்பை
மந்திரி சகன்புஜ்பாலுக்கு கொலை மிரட்டல்; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
மும்பை

மந்திரி சகன்புஜ்பாலுக்கு கொலை மிரட்டல்; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
15 Oct 2023 12:45 AM IST

மந்திரி சகன்புஜ்பாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மந்திரி சகன்புஜ்பாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மந்திரிக்கு கொலை மிரட்டல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மந்திரியுமான சகன்புஜ்பால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்தது. அதில், "ஒழுங்காக இரு அல்லது உன்னை முடித்துவிடுவோம். நீண்ட நாட்கள் நீ இருக்க மாட்டாய்" என மராத்தியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி அம்பாதாஸ் கைரே, அம்பாட் போலீசில் புகார் அளித்தார்.

வலைவீச்சு

போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரி சகன்புஜ்பாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மந்திரிக்கு கொலை மிரட்டல் பர்பானி பகுதியில் இருந்து வந்தது தெரியவந்து உள்ளது. தேசியவாத காங்கிரஸ் சமீபத்தில் 2 ஆக உடைந்தது. சகன்புஜ்பால் அஜித்பவார் ஆதரவு அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்