< Back
மும்பை
தவுலதாபாத் கோட்டை தேவ்கிரி கோட்டை என பெயர் மாற்றப்படும்- மந்திரி தகவல்
மும்பை

தவுலதாபாத் கோட்டை தேவ்கிரி கோட்டை என பெயர் மாற்றப்படும்- மந்திரி தகவல்

தினத்தந்தி
|
18 Sept 2022 5:17 PM IST

தவுலதாபாத் கோட்டை தேவ்கிரி கோட்டை என பெயர் மாற்றப்படும் என சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறினார்.

மும்பை,

தவுலதாபாத் கோட்டை தேவ்கிரி கோட்டை என பெயர் மாற்றப்படும் என சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா கூறினார்.

பெயர் மாற்றப்படும்

மாநில சுற்றுலா துறை மந்திரி மங்கல் பிரதாப் லோதா நேற்று முன் தினம் அவுரங்காபாத் அருகே உள்ள தவுலதாபாத் கோட்டையில் நடந்த ஐதராபாத் விடுதலை நாள் விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் கோட்டையில் உள்ள பாரத் மாதா கோவிலில் தேசிய கொடி ஏற்றினார். விழாவுக்கு பிறகு அவர் கூறியதாவது:-

இந்த கோட்டை தவுலதாபாத் அகா தேவ்கிரி என அறியப்படுகிறது. எனினும் தவுலதாபாத் கோட்டை என தான் பரவலாக அழைக்கப்படுகிறது. எனவே இந்த கோட்டையின் பெயரை தேவ்கிரி கோட்டை என மாற்ற சுற்றுலா துறை பரிந்துரை செய்யும்.

ஆண்டுதோறும் தேசிய கொடி

இந்த திட்டத்தில் தற்போது முதல் முறையாக ஐதராபாத் விடுதலை நாளையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இனிமேல் ஆண்டுதோறும் தேசிய கொடி ஏற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவ்கிரி கோட்டை 14-வது நூற்றாண்டில் முகமது துக்ளக்கால் தவுலதாபாத் கோட்டை என பெயர் மாற்றப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தேவ்கிரி கோட்டை என பெயர் மாற்றப்பட உள்ளது.

மேலும் செய்திகள்