< Back
மும்பை
முதலாளியின் மீது ஆத்திரம்... மின்சாரம் பாய்ச்சி பழிதீர்த்த சமையல்காரர் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
மும்பை

முதலாளியின் மீது ஆத்திரம்... மின்சாரம் பாய்ச்சி பழிதீர்த்த சமையல்காரர் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
20 Sept 2023 3:48 AM IST

தன்னிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டதால் கோபத்தில் மின்சாரத்தை பாய்ச்சியதாக சமையல்காரர் ராஜ்குமார் சிங் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி ஆசிரியை பெத்சேபா மோரிஸ் என்பவர் தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ராஜ்குமார் சிங்(25) என்ற நபர் சமையல்காரராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆசிரியை பெத்சேபா தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது சமையல்காரர் ராஜ்குமார் சிங், மின்சார வயர்கள் மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதனால் பெத்சேபா பயத்தில் அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து அறையில் இருந்து அவரது மகன் ஓடி வந்து பார்த்த போது, சமையல்காரர் ராஜ்குமார் சிங், தனது முதலாளி பெத்சேபா தன்னிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டதால் கோபத்தில் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சியதாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் கேட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் ஆசிரியை பெத்சேபா மோரிஸ் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 308-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சமையல்காரர் ராஜ்குமார் சிங்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்