< Back
மும்பை
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் சரத்பவாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
மும்பை

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் சரத்பவாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

தினத்தந்தி
|
29 July 2023 1:15 AM IST

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் சரத்பவாரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

மும்பை,

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் சரத்பவாரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

சரத்பவாருடன் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஒ.பி.சவான் அரங்கத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், முத்த காங்கிரஸ் தலைவர் நசீம் கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சசிகாந்த் ஷிண்டே மற்றும் ரோகித் பவாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

100 தலைவர்கள்

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய நசீம் கான், "ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் "இந்தியா" கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடைபெறும்" என்றார். அதேபோல கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறுகையில், "இந்தியா கூட்டணி கூட்டத்தில் கிட்டத்தட்ட 100 தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் பேசி உள்ளோம். மகா விகாஸ் அகாடி உறுப்பினர்களாகிய நாங்கள், மும்பையில் நடைபெறும் கூட்டத்தின் வெற்றியை உறுதிசெய்ய உறுதி பூண்டுள்ளோம். மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி நடத்தப்படும். 3 கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யும் பணியும், வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையும் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி

அஜித்பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு போகும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்