< Back
மும்பை
உஸ்மனாபாத் துல்ஜா பவானி கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.19 கோடி வசூல்
மும்பை

உஸ்மனாபாத் துல்ஜா பவானி கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.19 கோடி வசூல்

தினத்தந்தி
|
10 July 2023 1:15 AM IST

உஸ்மனாபாத், துல்ஜாபூரில் பிரசித்தி பெற்ற துல்ஜா பவானி கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.19 கோடி வசூல் வந்துள்ளது.

மும்பை,

உஸ்மனாபாத், துல்ஜாபூரில் பிரசித்தி பெற்ற துல்ஜா பவானி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த நிதி ஆண்டில் (2022-23) கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை, சிறப்பு கட்டண தரிசனம் உள்ளிட்டவைகள் மூலம் ரூ.54 கோடி கிடைத்து உள்ளது. இதுகுறித்து கோவில் தலைவரும், மாவட்ட கலெக்டருமான சச்சின் ஓம்பேஷ் கூறியதாவது:-

கடந்த ஆண்டில் கோவிலுக்கு ரூ.54 கோடி கிடைத்து உள்ளது. இதில் ரூ.15 கோடி பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்காக செலுத்திய கட்டணம். ரூ.19 கோடி உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்து உள்ளது. 2021-22-ம் ஆண்டில் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை, கட்டண தரிசனம் உள்ளிட்டவை மூலம் ரூ.29 கோடி கிடைத்து இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த வசதியை வழங்குகிறோம். அதன்காரணமாக வருவாய் அதிகரித்து உள்ளது. 2009 முதல் 2022 வரை கோவிலுக்கு 207 கிலோ தங்கம், 2 ஆயிரத்து 570 வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. தங்கத்தை உருக்கிய பிறகு 111 கிலோ 24 கேரட் சுத்தமான தங்கம் கிடைத்தது. அதன் மதிப்பு ரூ.65 கோடி. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்