< Back
மும்பை
விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வெங்காயத்துக்கு குளிர்பதன கூடங்கள் அமைக்கப்படும் - முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி
மும்பை

விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வெங்காயத்துக்கு குளிர்பதன கூடங்கள் அமைக்கப்படும் - முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி

தினத்தந்தி
|
23 Aug 2023 1:30 AM IST

வெங்காயத்துக்கு குளிர்பதன கூடங்கள் அமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை,

வெங்காயத்துக்கு குளிர்பதன கூடங்கள் அமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

ஏற்றுமதி வரி

விலை உயர்வை தடுக்கும் வகையில் வருகிற டிசம்பர் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்து உள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மொத்த மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி வைத்து உள்ளனர். விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீத வரியை திரும்ப பெறவேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

முதல்-மந்திரி ஷிண்டே பேட்டி

இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவாருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வெங்காயத்துக்கு குளிர்பதன கூடங்கள் (கோல்டு ஸ்டோரேஜ்) அமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்தால், விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதற்கான வேலைகளை செய்ய சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் பேச்சு

வெங்காய பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். உள்துறை மந்திரி அமித்ஷா, பியூஸ் கோயலிடம் பேசி உள்ளோம். மாநில வேளாண்துறை மந்திரி தனஞ்செய் முண்டே இதுதொடர்பாக டெல்லி சென்று பியூஸ் கோயலை சந்தித்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்