< Back
மும்பை
ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தணிக்கையாளர் கைது
மும்பை

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தணிக்கையாளர் கைது

தினத்தந்தி
|
19 Aug 2023 7:45 PM GMT

துலேவில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தணிக்கையாளரை போலீசார் கைது செய்தனர்

நாசிக்,

துலேவில் கூட்டுறவு சங்க தணிக்கையாளராக இருந்து வருபவர் சகராம் தாக்ரே (வயது56). இவர் ஜல்காவ் மாவட்டத்தின் யாவல் பகுதியில் ஸ்ரீ மகாலெட்சுமி நகர்புற கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். ஜல்காவ் பகுதியை சேர்ந்த ஒருவர் சாவ்டா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கூட்டுறவு சங்கத்தின் வசம் இருந்த கடை மற்றும் அதற்கான டெபாசிட் தொகையை தனது பெயருக்கு மாற்றி தர கோரி சிறப்பு தணிக்கையாளர் சகராம் தாக்ரேவிடம் தெரிவித்தார். இதற்கு அவர் ரூ.5 லட்சம் லஞ்சம் தந்தால் மாற்றி தருவதாக தெரிவித்தார். பணம் தருவதாக கூறிய அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் யோசனைப்படி கடந்த 17-ந் தேதி துலேயில் உள்ள அலுவலகத்திற்கு சென்ற புகார்தாரர் சகராம் தாக்ரேவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அரசு தணிக்கையாளர் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்