< Back
மும்பை
மும்பை
12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|7 July 2022 5:39 PM IST
ஆசிரம பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் சக்ரே பகுதியில் ஆசிரம பள்ளியில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்தார். நேற்று மாலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுபற்றி தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மாணவி எழுதியிருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தான் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.