< Back
மும்பை
மும்பை
புனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு - 16 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
|11 Oct 2023 1:00 AM IST
புனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 16 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது
புனே,
புனே காசர்வாடி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் சுத்தம் செய்ய குளோரின் வாயு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டு இருந்தது. நேற்று காலை 9 மணி அளவில் குளத்தில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்ததில் அங்கிருந்த 16 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சீல் வைத்தனர். பின்னர் தண்ணீரில் மூழ்கடித்தனர். அங்கிருந்த மக்களை அவசரமாக வெளியேற்றினர். உடல் நலம் பாதித்த 16 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விபத்தில் உயிர் காக்கும் வீரர்கள் சிலரும் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.