< Back
மும்பை
18-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை

18-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
16 Sept 2023 1:30 AM IST

மும்பையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மும்பை,

மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை நிறைவாக பெய்யாத நிலையில் கடந்த 8-ந்தேதி மீண்டும் மழை பெய்தது. தொடர்ச்சியாக 2 நாட்கள் பெய்து வந்த நிலையில் நேற்றும் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அன்றைய தினத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தானே, பால்கருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் மீண்டும் உருவாகி உள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களில் ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலம் வழியாக மராட்டியத்தை நெருங்க உள்ளது. இதன்பின்னர் மராட்டியத்தில் ஓரிரு மாவட்டங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்