< Back
மும்பை
மும்பை, தானேயில்  பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
மாவட்ட செய்திகள்
மும்பை

மும்பை, தானேயில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
20 Jun 2022 6:01 PM IST

மும்பை, தானேயில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மும்பை,

மும்பை, தானேயில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மழை பெய்யும்

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பருவ மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன்படி கடந்த 2 நாட்களாக நகரில் பரவலாக மழை பெய்தது. எனினும் இந்த மழை காரணமாக பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகரில் நேற்று காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை நகர் பகுதியில் 4.3 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 1 செ.மீ., மேற்கு புறநகரில் 1.5 செ.மீ. மழையும் பதிவாகியது.

இந்தநிலையில் மும்பையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தானே, ராய்காட்டிலும் நாளை மிகவும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-ந் தேதி வரை

இதேபோல வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதேபோல வரும் வெள்ளிக்கிழமை வரை பால்கர், தானே, ராய்காட்டில் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்