< Back
மும்பை
டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.7.50 கோடி மோசடி செய்த 11 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு - 2 பேர் கைது.
மும்பை

டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.7.50 கோடி மோசடி செய்த 11 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு - 2 பேர் கைது.

தினத்தந்தி
|
18 Jun 2023 6:45 PM GMT

டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.7.50 கோடி மோசடி செய்த 11 ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.7.50 கோடி மோசடி செய்த 11 ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசில் புகார்

மும்பை அந்தேரியை சேர்ந்த வியாபாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 5 பெண்கள் உள்பட 11 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் வியாபாரி தனது நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தார். அப்போது கம்பெனிக்கு சொந்தமான ரூ.7 கோடியே 50 லட்சம் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பணம் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்தது அந்தேரி பகுதி என்பதால் புகாரை சாகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

11 பேர் மீது வழக்கு

இதன்படி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுவப்னில் சவான், கிரிஷ் அகர்வால் ஆகிய 2 ஊழியர்களை கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். இதில் சுவப்னில் சவான் ஏற்கனவே கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7 கோடியே 50 லட்சத்தை முறைகேடாக தங்களது வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்து உள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் விமல் ஜெகதீஷ் அகர்வால் மற்றும் அவரது மனைவி நூபுர் உள்பட மொத்தம் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்