< Back
மும்பை
மும்பை
இறைச்சி வியாபாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 10 பேர் மீது வழக்கு
|28 Aug 2022 7:51 PM IST
தானே மாவட்டம் பத்லாபூர் தாக்குர்வாடி பகுதியில் இறைச்சி வியாபாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 10 பேர் மீது வழக்கு
தானே,
தானே மாவட்டம் பத்லாபூர் தாக்குர்வாடி பகுதியை சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் வந்த போது கும்பல் ஒன்று வழிமறித்தது. பின்னர் அவரை காரில் இருந்து வெளியே இழுத்துபோட்ட கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில், கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இறைச்சி கடை வியாபாரியை நோக்கி சுட்டார். இதில் குறி தவறியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதனால் பயந்துபோன இறைச்சிக்கடைக்காரர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், இதில் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.