< Back
மும்பை
ரூ.18 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு
மும்பை

ரூ.18 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
17 Aug 2023 1:00 AM IST

தானேயில் ரூ.18 கோடி மோசடி செய்த தனியார் ரசாயன நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

தானே,

தானே மாவட்டத்தை சேர்ந்த ரசாயன நிறுவனம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு நிறுவனத்திற்கு ரசாயனம் வினியோகம் செய்தது. இதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதன்பின்னர் தனியார் நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனை அறிந்த ரசாயன நிறுவனத்தினர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் நிறுவன உரிமையாளர்களான ஜெய்பிரகாஷ் யாதவ், குசும் யாதவ் ஆகியோர் சேர்ந்து ரசாயன நிறுவனத்திடம் இருந்து ரூ.18 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்