வாடகைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது வழக்கு
|வாடகை வீட்டில் வசிப்போரின் விவரங்களை போலீசில் சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நவிமும்பை,
வாடகை வீட்டில் வசிப்போரின் விவரங்களை போலீசில் சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாடகைதாரர்களின் விவரம்
நவிமும்பையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக அங்கு வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். வாடகைதாரர்கள் பற்றி விவரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிப்பதுடன் வாடகை ஒப்பந்த பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உள்ளனர். இதனை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் போலீசார் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகைதாரர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர்.
8 பேர் மீது வழக்கு
இதில் பேலாப்பூர் என்.ஆர்.ஐ. போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உல்வே பகுதியை சேர்ந்த சிலர் வாடகைதாரர்களின் விவரங்களை போலீசில் சமர்ப்பிக்காதது தெரியவந்தது. இதையடுத்து வாடகைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்காத வீட்டின் உரிமையாளர்களான புஷ்பா ராதோட், கிரண் ராத்தோட், சவுதுபாய் கோலி, பாலு கஜ்கே, அசோக் ஜங்கார், அஷிஷ் தீர், அபர்ணா ஜோண்டலி, சமீர் தாவூத்கான் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.