< Back
மும்பை
மின்சார ரெயிலில் புத்த துறவியை அவதூறாக பேசிய 3 பேர் மீது வழக்கு
மும்பை

மின்சார ரெயிலில் புத்த துறவியை அவதூறாக பேசிய 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
4 Oct 2023 1:45 AM IST

மின்சார ரெயிலில் புத்த துறவியிடம் அவதூறாக பேசிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளானர்

மும்பை,

புத்த பிட்சு எனப்படும் புத்த துறவி ஒருவர் சம்பவத்தன்று இரவு பேலாப்பூர் நோக்கி மின்சார ரெயிலில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரெயிலில் மதுபோதையில் இருந்த 3 பேர் புத்த துறவியை அவதூறாக பேசினர். மேலும் அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 27 வயது புத்த துறவி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து அவதூறாக பேசுவது, கொள்ளையடிக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்