< Back
மும்பை
பவாய் ஐ.ஐ.டி.யில் பெண்கள் கழிவறையை எட்டிப்பார்த்த கேண்டீன் ஊழியர் கைது
மும்பை

பவாய் ஐ.ஐ.டி.யில் பெண்கள் கழிவறையை எட்டிப்பார்த்த கேண்டீன் ஊழியர் கைது

தினத்தந்தி
|
21 Sept 2022 7:45 AM IST

மும்பை பவாய் பகுதி ஐ.ஐ.டி.யில் பெண்கள் கழிவறையை எட்டிப்பார்த்த கேண்டீன் ஊழியர் கைது

மும்பை,

மும்பை பவாய் பகுதியில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இங்குள்ள பெண்கள் விடுதியின் கழிவறையை ஒருவர் எட்டிப்பார்ப்பதை மாணவிகள் பார்த்தனர். மாணவிகள் சத்தம் போட்டதை அடுத்து விடுதி வளாகத்தில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் பெண்கள் கழிவறையை எட்டிப்பார்த்தவர் விடுதியில் உள்ள இரவு நேர கேண்டீன் ஊழியர் பின்டு காரியா (வயது22) என்பது தெரியவந்தது. அவர் மீது நேற்று முன்தினம் 22 வயது பெண் பவாய் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் கேண்டீன் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் போலீசார் அவரின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் விடுதி பெண்களின் படம் மற்றும் வீடியோக்கள் எதுவும் இல்லை என அதிகாரி ஒருவர் கூறினார்.

சண்டிகார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பவாய் ஐ.ஐ.டி.யில் உள்ள பெண்கள் விடுதி கழிவறையை கேண்டீன் ஊழியர் எட்டிப்பார்த்த சம்பவம் மாணவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்