< Back
மும்பை
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் பிணமாக மீட்பு- 2 பேர் கைது
மும்பை

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் பிணமாக மீட்பு- 2 பேர் கைது

தினத்தந்தி
|
22 April 2023 12:15 AM IST

பீட் மாவட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவனை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மும்பை,

பீட் மாவட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவனை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சிறுவன் பிணமாக மீட்பு

பீட் மாவட்டம் மாஜல்காவ் தாலுகா நிட்ருத் கிராமத்தை சேர்ந்தவர் முர்தசா. இவரது மகன் குலாம் முகமது (வயது15). குலாம் முகமது சம்பவத்தன்று விறகு சேகரிக்க சென்றான். இந்தநிலையில் அவன் அந்த பகுதியில் விவசாய நிலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

சிறுவனை அந்த பகுதியை சேர்ந்தவர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார்.

2 பேர் கைது

அந்த புகாரில், "சம்பவத்தன்று எனது மகன்கள் 2 பேர் விறகு சேகரிக்க சென்றனர். அப்போது தங்களின் தோட்டத்துக்குள் நுழைந்ததற்காக கைலாஷ் என்ற பின்டு தாகே 2 பேருடன் சேர்ந்து 15 வயது மகனை தாக்கி உள்ளார். உடனே மற்றொரு மகன் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான். இந்தநிலையில் கைலாசுடன் இருந்த ஒருவர், சிறுவன் விறகு கட்ட வைத்து இருந்த துணியை பறித்து கழுத்தை நெரித்தார். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து போலீசார் சிறுவனை கொலை செய்ததாக 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சிறுவன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சிறுவனின் உடலில் காயங்கள் இல்லை எனவும், அவன் வீட்டில் சண்டை போட்டு வெளியே வந்ததாகவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்