< Back
மும்பை
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடியும் வரை மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை
மும்பை

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடியும் வரை மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை

தினத்தந்தி
|
28 Aug 2023 12:45 AM IST

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடியும் வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடியும் வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கிய மந்திரி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக மும்பையில் இருந்து அதிகளவில் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக கொங்கன் பகுதிக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள். இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி சமயத்தில் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் ராய்காட் பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய மாநில மந்திரி ரவீந்திர சவான் சென்றார். அப்போது அவரே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்தில் சிக்கி கொண்டார்.

கனரக வாகனங்களுக்கு தடை

இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடியும் வரை (அடுத்த மாதம் 28-ந் தேதி) மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மந்திரி ரவீந்திர சவான் அலுவலகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகளுடன் ஆலோசித்த பிறகு மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடையின்றி கொங்கன் பகுதிக்கு சென்று வரவும், சாலை சீரமைப்பு பணிகள் சீராக நடக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக நவிமும்பை போலீசார் வெளியிட்டுள்ள உத்தரவில், "மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு மும்பை- கோவா நெடுஞ்சாலை அல்லாத மாற்று வழிகள் பரிந்துரைக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்