புனேயில் ஆட்டோ கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
|புனேயில் ஆட்டோ கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புனே,
புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மற்றும் பாராமதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புனே மண்டலத்தில் ஆட்டோ கட்டணமாக முதல் 1½ கிலோ மீட்டருக்கு ரூ.21-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.14 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வட்டார போக்குவரத்து ஆணையம் இந்த கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதன்படி முதலாவது 1½ கிலோ மீட்டருக்கு 2 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும் முடிவை மண்டல போக்குவரத்து ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. பயணிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்களின் பல்வேறு அமைப்புகள் இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்ததை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டல போக்குவரத்து ஆணையத்தின் அடுத்த கூட்டம் நடைபெறும் வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.