கல்வா ரெயில் நிலையம் அருகே கஞ்சா புகைக்கும் ஆட்டோ டிரைவர்கள்; வீடியோ வைரல்
|கல்வா ரெயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்திள்ளனர்
தானே,
தானே அருகே கல்வா ரெயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற டிரைவர்கள் ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர். இதனை கண்ட நபர் ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வைரலாக பரப்பி விட்டார். பொதுவெளியில் கஞ்சா புகைக்கும் இதுபோன்ற ஆட்டோ டிரைவர்கள் போதையில் வாகனத்தை ஓட்டி பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து வைரல் வீடியோ பற்றி தானே உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக கல்வா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன். கஞ்சா புகைத்த ஆட்டோ டிரைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இந்த நிலையில் கஞ்சா புகைக்கும் ஆட்டோ டிரைவர்களை கண்டறிந்து அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.