< Back
மும்பை
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
மும்பை

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 1:00 AM IST

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

தானே,

கல்யாண் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஜாதவ்(வயது40). இவர் அதே பகுதியை சேர்ந்த ரசிகா(36) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் கடந்த 5 ஆண்டாக ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் விஜய் ஜாதவ் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அப்பெண்ணிடம் கூறினார். இதற்கு ரசிகா மறுப்பு தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அப்பெண் வசித்து வந்த குடிசை வீட்டிற்கு சென்ற விஜய் ஜாதவ் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் ரசிகாவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ரசிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ரசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற விஜய் ஜாதவை சில மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்