ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது; 35 கார்டுகள் பறிமுதல்
|மிராபயந்தரில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யபட்டது
வசாய்,
தானே மாவட்டம் மிராபயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது48). சம்பவத்தன்று பணம் எடுக்க ஏ.டி.எம். மையம் சென்றார். அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறினார். பின்னர் பணம் வரவில்லை என கூறி கார்டை அந்த நபரிடம் திரும்பி கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில் ராேஜசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்ததாக தகவல் வந்தது. பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் உதவி செய்வதாக கூறி ஆட்டோ டிரைவர் வங்கி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவரது பெயர் கிருஷ்ணா திவாரி (வயது24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் இதே பாணியில் பலரிடம் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 35 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.