சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் சிவசேனா விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை- ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு
|சிவாஜி பார்க்கில் தசரா பொது கூட்டம் நடத்துவதற்கான சிவசேனாவின் விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
சிவாஜி பார்க்கில் தசரா பொது கூட்டம் நடத்துவதற்கான சிவசேனாவின் விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
விண்ணப்பம் வாங்க மறுப்பு
சிவசேனா கட்சி கடந்த 1966-ம் ஆண்டு பால் தாக்கரேயால் மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் சிவாஜி பார்க் மைதானத்தில் நடத்தப்படும் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தற்போது சிவசேனா 2 ஆக உடைந்த நிலையில், தசரா பொதுக்கூட்டம் நடத்துவதற்கான விண்ணப்பத்தை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
அடக்குமுறை அரசு
இதுகுறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், " மும்பையில் தசரா பொது கூட்டம் நடத்த சிவசேனா அனுமதி கேட்டது. ஆனால் அதிகாரிகள் எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இது (ஏக்நாத் ஷிண்டேயின்) அடக்குமுறை அரசாங்கம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் முகமூடியில் யார் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியவரும். எனது சிவ்சாம்வத் யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் சிவசசேனாவுடன் உள்ளனர். துரோகிகளுடன் இல்லை. " என்றார்.