< Back
மும்பை
சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சி- கொத்தனார் கைது
மும்பை

சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சி- கொத்தனார் கைது

தினத்தந்தி
|
6 July 2022 2:19 PM GMT

சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மும்பை,

சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுவன் கடத்தல்

நவிமும்பை பன்வெல் அருகே சிஞ்ச்பாடாவை சேர்ந்தவர் கஜிருல். கட்டுமான ஒப்பந்ததாரரான இவரது மகன் ஆலம் (வயது11). இவரிடம் சைபுதீன் என்பவர் கொத்தனாராக கடந்த ஒரு ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் கட்டிடம் கட்டும் பணிக்காக சைபுதீனிடம் கஜிருல் ஒப்பந்தம் பேசி பணியில் அமர்த்தினார். வேலை முடிந்ததும் ஊதியம் வழங்குவதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் கட்டுமான ஒப்பந்ததாரரின் மகன் ஆலமை, சைபுதீன் கடத்தி சென்றார்.

இது பற்றி அறிந்த கஜிரூல் அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு ரூ.8 ஆயிரம் தந்தால் சிறுவன் ஆலமை விடுவதாக தெரிவித்தார்.

கொத்தனார் கைது

இதற்கு ஒப்புக்கொண்ட கஜிரூல் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் சைபுதின் மீண்டும் ரூ.30 ஆயிரம் தரும்படி மிரட்டல் விடுத்தார். இதனால் கஜிரூல் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் பிவண்டியில் சைபுதீன் சிறுவன் ஆலமுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நார்போலி போலீசாரின் உதவியுடன் அங்கு விரைந்து சென்ற போலீசார் சைபுதீனை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்