காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளையர்கள்
|காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரம்
பீட் மாவட்டம் யெலம்ப்காட் பகுதியில் மகாராஷ்ட்ரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் முகக்கவசம் அணிந்தபடி காரில் வந்த கும்பல் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்தது. அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிற்றை கட்டி இழுத்து பெயர்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை கருவி அலாரம் எழுப்பியது.
கும்பலுக்கு வலைவீச்சு
இதனால் பயந்து போன கும்பல் ஏ.டி.எம். எந்திர கொள்ளை முயற்சியை கைவிட்டனர். அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். காரை கட்டி இழுத்ததால் ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்தது.