< Back
மும்பை
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி; 4 பேர் கைது
மும்பை

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி; 4 பேர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2023 12:45 AM IST

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

மும்பை காந்திவிலி மேற்கு எஸ்.வி. ரோடு மகாஜன்வாடி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 4 பேர் சந்தேகப்படும் வகையில் ஏ.டி.எம் மையம் அருகே நடமாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்டவர்கள் நசீர் அலி சேக், கமல்பிரகாஷ் யாதவ், ராம்மூர்த்தி ஐயர், இஸ்ரத் கான் ஆகிய 4 பேர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கத்தி, ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் கருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் வங்கியில் டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் உதவி செய்வதாக கூறி பணத்தை அபேஸ் செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்