< Back
மும்பை
மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்; இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மும்பை

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்; இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

காந்திவிலியில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

காந்திவிலியில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அதிகாரி

மும்பை காந்திவிலி கிழக்கு பகுதியை சேர்ந்த முதியவர் விஷ்ணுகாந்த்(வயது79). தனியார் நிறுவன முன்னாள் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்தார். இவரது மனைவி சகுந்தலா(76). கணவன், மனைவி 2 பேருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. மேலும் நோயின் பாதிப்பு காரணமாக சகுந்தலா படுத்த படுக்கையாக இருந்தார். இதனால் அவரை கவனித்து கொள்ள அனிதா தோரட் என்ற பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி காலை அனிதா தோரட் வழக்கம் போல் வேலைக்கு வந்தார். அப்போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வேலைக்கார பெண் காவலாளி உதவியுடன் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

ரத்த வெள்ளத்தில் மீட்பு

அப்போது, படுக்கை அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சகுந்தலாவும், மற்றொரு அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஷ்ணுகாந்தும் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விஷ்ணுகாந்த் தனது மனைவி சகுந்தலாவை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதன் பின்னர் சகுந்தலா இறந்துவிட்டதாக கருதி அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்