< Back
மும்பை
அமராவதி மருந்து கடைக்காரர் கொலை: குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ. அறிவிப்பு
மும்பை

அமராவதி மருந்து கடைக்காரர் கொலை: குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு- என்.ஐ.ஏ. அறிவிப்பு

தினத்தந்தி
|
13 Sept 2022 5:52 PM IST

அமராவதி மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்து உள்ளது.

மும்பை,

அமராவதி மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்து உள்ளது.

மருந்து கடைக்காரர் கொலை

அமராவதியில் மருந்துக்கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே. இவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஜூன் 21-ந் தேதி உமேஷ் கோல்கே கொலை செய்யப்பட்டார். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதால் தான் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உமேஷ் கோல்கே கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இதுவரை 10 பேரை கைது செய்து உள்ளது.

ரூ.2 லட்சம் சன்மானம்

இந்த வழக்கில் தொடர்புடைய அமராவதி, சாகீர் காலனியை சேர்ந்த சாகீம் அகமது பிரோஷ் அகமது (வயது 22) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். அவரை என்.ஐ.ஏ. வலைவீசி தேடி வருகிறது.

இந்தநிலையில் வாலிபர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்