< Back
மும்பை
ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வேளாண்துறை அதிகாரி கைது
மாவட்ட செய்திகள்
மும்பை

ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வேளாண்துறை அதிகாரி கைது

தினத்தந்தி
|
29 Jun 2022 11:36 PM IST

ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வேளாண்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் தகானு தாலுகா வேளாண்துறை அதிகாரியாக இருந்து வருபவர் சந்தோஷ் பவார். அதே பகுதியில் விவசாய மையம் வைத்து நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் விற்பனை மற்றும் கொள்முதல் குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய தவறியதாக தெரிகிறது. இதனால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேளாண்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரி சந்தோஷ் பவாரை சந்தித்து உள்ளார்.

இதில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தரும்படி அதிகாரி தெரிவித்தார். அவரிடம் நடத்திய பேரத்தில் ரூ.7 ஆயிரம் தருவதாக உரிமையாளர் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் தர விருப்பம் இல்லாத அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் உரிமையாளர் புகார் அளித்தார். இந்த நிலையில் லஞ்சபணத்தை பெற்ற வேளாண்துறை அதிகாரி சந்தோஷ் பவாரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்