< Back
மும்பை
நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
மும்பை

நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

தினத்தந்தி
|
15 Oct 2023 1:00 AM IST

நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

மும்பை,

நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

கூடுதல் ரெயில் சேவை

நவராத்திரியையொட்டி மும்பையில் கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. நவராத்திரி கொண்டாட செல்லும் மக்களின் வசதிக்காக இந்த கூடுதல் சேவைகள் இயக்கப்படுகிறது. இதன்படி வருகிற 19 முதல் 23-ந் தேதி வரை இரவு 10.30 மணி முதல் 12.20 வரை கூடுதலாக 14 சேவைகள் குந்த்விலி - தகிசர், தகிசர் - அந்தேரி மேற்கு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த கூடுதல் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும்.

உற்சாகமாக கொண்டாட உதவும்

தற்போது இந்த வழித்தடத்தில் இரவு 10.30 மணி வரை மட்டுமே சேவை இயக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி கொண்டாட்டத்துக்காக சேவை நள்ளிரவு 12.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " இந்த ரெயில் சேவைகள் நவராத்திரியை பொது மக்கள் உற்சாகமாக கொண்டாட உதவியாக இருக்கும். தற்போது வரை சுமார் 5 கோடி பேர் சுற்றுச்சூழலுக்கு உகந்த மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து அதற்கான முக்கியத்துவத்தை காட்டி உள்ளனர் " என்றார்.

மேலும் செய்திகள்