< Back
மும்பை
மும்பை
தானே ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை; ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூல்
|11 Oct 2023 1:00 AM IST
தானே ரெயில் நிலையத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
தானே,
மத்திய ரெயில்வேயின் தானே ரெயில் நிலையத்தில் ஓசிப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கண்டறிய பெரியளவில் டிக்கெட் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி மும்பை கோட்டத்தை சேர்ந்த 120 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் 30 ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொண்ட குழுவினர் கடந்த 9-ந்தேதி ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஓசிப்பயணம் செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஏற்கனவே மேற்கு ரெயில்வேயில் கடந்த 6 மாதம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.81 கோடி வசூலான நிலையில் தானே ரெயில் நிலையத்தில் நடத்திய ஒரு நாள் சோதனையில் மட்டும் ரூ.8 லட்சம் அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.