< Back
மும்பை
மும்பை
திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை- காதலன் மீது வழக்கு
|13 Sept 2022 9:11 PM IST
தானே மாவட்டம் பிவண்டியை திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை- காதலன் மீது வழக்கு
தானே,
தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சுவப்னில் கோவிந்த் (25) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தி வந்தார். இதற்கு சுவப்னில் கோவிந்த் மறுத்ததாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணுடனான தொடர்பை அவர் துண்டித்து கொண்டார். இதனால் இளம்பெண் மனஉளைச்சல் அடைந்தார். நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் இளம்பெண் தற்கொலைக்கு வாலிபர் சுவப்னில் கோவிந்த் தான் காரணம் என தெரியவந்தது. இதனால் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரை நடத்தி வருகின்றனர்.