< Back
மும்பை
மும்பை
பயந்தரில் பெட்டி கடை நடத்தி வந்த பெண் கடத்தி கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் கைது
|22 Sept 2022 6:15 AM IST
தானே மாவட்டம் பயந்தரில் பெட்டி கடை நடத்தி வந்த பெண் கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது
வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் ரெயில் நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் பகுதியில் பெண் ஒருவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அப்பெண் நடத்தி வரும் பெட்டி கடைக்கு சென்று கடையில் உள்ள எல்லா பொருட்களையும் தான் வாங்க இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய அப்பெண்ணிடம் தன்னுடன் வந்தால் பணம் தருவதாக தெரிவித்தார். ஆட்டோவில் ஏறி சென்ற அப்பெண்ணை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பெண்ணை கற்பழித்த 28 வயது ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.