< Back
மும்பை
தசரா கூட்டத்துக்கு வந்தபோது வேன் மீது லாரி மோதி சிவசேனா தொண்டர் பலி
மும்பை

தசரா கூட்டத்துக்கு வந்தபோது வேன் மீது லாரி மோதி சிவசேனா தொண்டர் பலி

தினத்தந்தி
|
25 Oct 2023 12:45 AM IST

தசரா கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிவசேனா தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்

மும்பை,

தசரா பண்டிகையொட்டி மும்பை ஆசாத் மைதானத்தில் சிவசேனா தரப்பிலும் மற்றும் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தரப்பிலும் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் இருந்தும் இரு கட்சி தொண்டர்களும் திரளாக வாகனங்கள், ரெயில்கள் மூலம் மும்பை வந்தனர். இந்த நிலையில் சிவசேனா கூட்டத்தில் கலந்து கொள்ள ரத்னகிரி-நாக்பூர் தேசிய நெடு்ஞ்சாலை சாங்கிலி மாவட்டம் காவதே மகான்கால் தாலுகா சிர்தோன் கிராம பகுதியில் நேற்று காலை சிவசேனா தொண்டர்கள் வேனில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி ஒன்று வேன் மீது மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்