< Back
மும்பை
சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது
மும்பை

சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 1:00 AM IST

சகாப்பூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யபட்டார்

தானே,

சகாப்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் மோரே என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கில் தொடர்புடைய ஒருவரை சந்தித்து உதவி செய்வதாக கூறி ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டு உள்ளார். அவரிடம் நடத்திய பேரத்தில் ரூ.30 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். பணம் கொடுக்க விரும்பாத அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனைப்படி புகார்தாரர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீஸ்காரர் சந்தோஷ் மோரேவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார். இதனை பெற்ற போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்